திருப்பாலத்துவ சபை தினத்தை முன்னிட்டு குருநகர் பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு கடந்த 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நாளை சிறப்பிக்கும் முகமாக அன்று மாலை சிறார்கள் ஆயர் எமிலியானுஸ் இல்லத்தை தரிசித்து அங்குள்ள ஓய்வுபெற்ற ஆயர் மற்றும் அருட்தந்தையர்களை சந்தித்து உரையாடினார்கள்.