யூபிலி ஆண்டு சிறப்பு நிகழ்வாக குருநகர் பங்குமக்களை இணைந்து முன்னெடுக்கப்பட்ட யூபிலி கதவு தரிசிப்பு கடந்த மாதம் 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் பங்குமக்கள் யாழ். புனித மரியன்னை பேராலயத்தை தரிசித்து யூபிலி கதவினூடாக உள்நுழைந்து அங்கு நடைபெற்ற ஒப்புரவு அருளடையாளம், நற்கருணை ஆராதனை, திருப்பலி ஆகியவற்றில் பங்குபற்றினர்.

By admin