குருத்துவ மற்றும் திருநிலைப்படுத்தல் திருச்சடங்குகள் மன்னார் மறைமாவட்டத்தில் கடந்த 09ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றன.

மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு திருப்பலியில் திவ்விய இரட்சகர் சபை திருத்தொண்டர் பெலிக்ஸ் பெர்னாண்டோ அவர்கள் குருவாகவும் திருவுள சபை அருட்சகோதரர்கள் மரியசீலன் ஜெரோம் மற்றும் சவுந்தரம் சஞ்சுதன் ஆகியோர் திருத்தொண்டர்களாகவும் திருநிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இத்திருப்பலியில் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை கிறிஸ்துநாயகம், திருவுளப்பணியாளர்
சபை இலங்கை மாகாண முதல்வர் அருட்தந்தை கொட்வின் கமிலஸ் சணா, திவ்ய இரட்சகர் சபை முதல்வர் அருட்தந்தை சான் கு மோ, இலங்கை மாகாண முதல்வர் அருட்தந்தை சன்ரன சுஜீவன் பெரேரா, மற்றும் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் கலந்துசெபித்தனர்.

By admin