மன்னார் முத்தரிப்புத்துறை பங்கை சேர்ந்த கிளறேசியன் துறவறசபை திருத்தொண்டர் அன்ரனி வேர்ஜின் லெம்பேட் அவர்களின் குருத்துவ திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு கடந்த 28ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு திருப்பலியில் திருத்தொண்டர் அவர்கள் புதிய குருவாக திருநிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

இத்திருநிலைப்படுத்தல் திருச்சடங்கில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அருட்தந்தையின் உறவினர்கள், இறைமக்களென பலரும் கலந்து செபித்தனர்.

By admin