தேசிய மறைக்கல்வி வாரத்தை முன்னிட்டு குமுழமுனை பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வுகள் கடந்த 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்றன.
பங்குத்தந்தை அருட்தந்தை நிதர்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் விவிலிய விளையாட்டுக்கள், முதியோர் சந்திப்பு, தீப்பாசறை, திரைப்பட காட்சிப்படுத்தல், அயற்பங்கு மாணவர்களுடனான சந்திப்பு என்பன இடம்பெற்றன.
இறுதிநாள் நிகழ்வுகள் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றதுடன் அன்றைய தினம் காலை சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து மாலை கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் வன்னி கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் அனுசரணையில் சுற்றுச்சூழல் தினத்தை சிறப்பித்து மாணவர்களுக்கு ஒரு தொகுதி மரக்கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டன.
வன்னி கரித்தாஸ் கியூடெக் நிறுவன இயக்குநர் அருட்தந்தை செபஜீவன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் முழங்காவில் பங்குத்தந்தை அருட்தந்தை தயதீபன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டதுடன் 180 வரையான மறைக்கல்வி மாணவர்கள் இந்நிகழ்வுகளில் பங்குபற்றினர்.