கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்மஸ் கரோல் நிகழ்வு கடந்த 19ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.
வைத்தியசாலை ஆன்மீக இயக்குநரும் கிளிநொச்சி பங்குத்தந்தையுமான அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கிளிநொச்சி உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை ராஜ் டிலக்சன் அவர்களின் உதவியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் கிளிநொச்சி மறைக்கோட்ட பங்குகளிலிருந்து சேகரிக்கப்பட்ட பொருட்கள் பொதிசெய்யப்பட்டு 400 வரையான நோயாளர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை பெனற், அருட்தந்தை இருதயதாஸ், மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர், வைத்தியர்கள், தாதியர்கள், வைத்தியசாலை பணியாளர்களென பலரும் கலந்து கொண்டனர்.

By admin