கிளிநொச்சி மறைக்கோட்ட மேய்புப்பணி பேரவைக்கூட்டம் கடந்த 25ஆம் திகதி வியாழக்கிழமை கிளிநொச்சி மேய்ப்புப்பணி மண்டபத்தில் நடைபெற்றது.
கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமல மரித்தியாகிகள் சபையைச் சேர்ந்த அருட்தந்தை றமேஸ் அவர்கள் கலந்து மேய்ப்புப்பணி பேரவை தொடர்பான கருத்துரை வழங்கினார்.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், மறைக்கோட்ட ஆணைக்குழு அங்கத்தவர்கள், பங்கு பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.