கிளிநொச்சி மறைக்கோட்ட இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட தவக்கால தியானம் கடந்த 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கிளிநொச்சி மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இயக்குநர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில், இளையோர் வவுனிக்குளம் கல்வாரி பூங்காவை தரிசித்து அங்கு நடைபெற்ற திருச்செபமாலை, சிலுவைப்பாதை தியானம், திருப்பலி என்பவற்றில் பங்குபற்றினார்கள்.
தியான நிறைவில் கிளிநொச்சி மறைக்கோட்ட இளையோர் ஒன்றியத்தினருக்கான கூட்டமும் புதிய நிர்வாகத்தெரிவு இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை பிறையன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.