கிளிநொச்சி மறைக்கோட்ட இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட பொங்கல் விழா சிறப்பு நிகழ்வு கடந்த 10ஆம் திகதி சனிக்கிழமை நாச்சிகுடா வேளாங்கன்னி அன்னை ஆலயத்தில் நடைபெற்றது.
குமுழமுனை பங்குத்தந்தை அருட்தந்தை நிதர்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கிளிநொச்சி மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இயக்குனர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து இளையோருக்கான ஒன்றுகூடலும், விளையாட்டுக்களும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் கிளிநொச்சி மறைக்கோட்ட பங்குகளை சேர்ந்த 80ற்கும் அதிகமான இளையோர் பங்குபற்றியிருந்தனர்.