கிளிநொச்சி புனித திரேசாள் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை றாஜ் டிலக்சன் அவர்களின் உதவியுடன் 1ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 30ஆம் திகதி திங்கட்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை பெனற் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட நிதி முகாமையாளர் அருட்தந்தை நேசநாயகம் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

By admin