கிளிநொச்சி பங்கில் முன்னெடுக்கப்பட்ட வீதி சிலுவைப்பாதை காட்சிப்படுத்தல் தியானம் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை நேற்றையதினம் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இத்தியானம் கிளிநொச்சி புனித அந்தோனியார் ஆலயத்தில் நற்கருணை வழிபாட்டுடன் ஆரம்பமாகி தொடர்ந்து A9 வீதியூடாக புனித திரேசாள் ஆலயத்தை சென்றடைந்து அங்கு நடைபெற்ற திருப்பலியுடன் நிறைவடைந்தது.
திருப்பலியை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை பெனற் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். திருப்பலியை தொடர்ந்து யேசுவின் திருப்பாடுகளை சித்தரிக்கும் வேள்வித்திருமகன் ஆற்றுகை அங்கு திரையிடப்பட்டது. இந்நிகழ்வில் கிளிநொச்சி தொன்னிந்திய சபை மற்றும் அங்கிலிக்கன் சபை அருட்பணியாளர்கள் கலந்துகொண்டதுடன் பங்குமக்கள் பக்தியுடன் இந்நிகழ்வுகளில் பங்குபற்றியிருந்தனர்.