கிளிநொச்சி அறிவியல்நகர் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் கத்தோலிக்க மாணவர்களின் ஆன்மீக தேவையை பூர்த்தி செய்யும் முகமாக பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கிறிஸ்து அரசர் ஆலயத்தில ஆன்மீக செயற்பாடுகளோடு சமூக செயற்பாடுகளும் முன்னெடுக்கபட்டுவருகின்றன.
பல்கலைக்கழக ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றுவரும் இவ்ஆன்மீக செயற்பாடுகளில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளிலான ஞாயிறு திருப்பலிகள், வழிபாடுகள், கருத்தமர்வுகள், சிரமதானங்கள் என்பவைகள் இடம்பெற்று வருவதுடன் இங்கு கல்வி பயிலும் தமிழ், சிங்கள மாணவர்கள் ஆர்வமுடன் பங்குபற்றி வருகின்றனர்.
![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2023/10/Snapshot_33-1.png)
![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2023/10/Snapshot_34-1.png)