கிளிநொச்சியில் திருமறைக் கலாமன்ற வளாகத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள நுண்கலைகள் பயிலக கலைக்கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு திருமறைக்கலாமன்ற உதவி நிர்வாக இயக்குநர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 31ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது.
கனடா நாட்டில் வாழ்ந்துவரும் திரு. கமலநாதன் அவர்களின் அனுசரணையில் ஜீவ ஊற்று அறக்கட்டளை நிறுவனத்தின் கட்டுமானப்பணியில் அமையப்பெறவுள்ள இக்கட்டடத்திற்கான அடிக்கல்லை அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்கள் நாட்டிவைத்தார்.