கிளறேசியன் துறவற சபையின் கிளாறட் சிறுவர் கதம்பத்தினால் முன்னெடுக்கப்பட்ட மாணவர் திறன் வினை விழா 27ஆம் திகதி சனிக்கிழமை யாழ். மறைக்கல்வி நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கதம்ப இயக்குநர் அருட்தந்தை அருள்ராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலை, இலக்கிய போட்டிகளும் பரிசளிப்பும் இடம்பெற்றன.
மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை ஜேம்ஸ் மற்றும் வைத்திய நிபுணர் திரு. சிவதாஸ் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட பங்குகளை சேர்ந்த 170ற்கும் அதிகமான சிறார்கள் பங்குபற்றியிருந்தனர்.