கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்மஸ் கரோல் பாடல் போட்டி மற்றும் நத்தார் தபால் முத்திரை சித்திரப்போட்டிக்கான முடிவுகள் அண்மையில் வெளியாகியுள்ளன.

கரோல் பாடல் போட்டியில் பங்குபற்றிய அணிகளில் தமிழ் மொழி மூலமான போட்டியில் திருகோணமலை மறைமாவட்டத்தை சேர்ந்த உவர்மலை குழந்தை இயேசு ஆலயம் முதலாமிடத்தையும் புனித லூர்த்து அன்னை திருத்தலம் இரண்டாமிடத்தையும் பெற்றுக்கொண்டதுடன் யாழ். மறைமாவட்டத்தின் கிளிநொச்சி மத்திய கல்லூரி மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டது.

அத்துடன் நத்தார் தபால் முத்திரைக்கான சித்திரப்போட்டியில் 15-21 வயதுக்குட்பட்டவர்களுக்கான பிரிவில் கீரிமலையை சேர்ந்த எடிசன் பென்சிலியோறா மற்றும் இணுவில் மேற்கு பிரதேசத்தை சேர்ந்த சிறிதரன் டிலக்சன் ஆகியோருடன் 10 வயதுக்குட்பட்டவர்களுக்கான பிரிவில் வவுனியாவை சேர்ந்த யூட் பிரதீபன் அலிஸ்ரன் ஆகியோர் தகுதி சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

By admin