கிறிஸ்து அரசர் மற்றும் புனித செசிலியா திருவிழாவை முன்னிட்டு மட்டக்களப்பு மறைமாவட்டம் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை லெஸ்லி ஜெயகாந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து பாடகர் குழாமினருக்கான பரிசளிப்பும் இடம்பெற்றன.
அருட்சகோதரிகள் பங்குமக்களென பலரும் கலந்து இந்நிகழ்வை சிறப்பித்தனர்.