போரினாலும் பொருளாதார நெருக்கடியினாலும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் கல்வி உதவித் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட கா.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான கணித பாட செயலமர்வு கடந்த 23ஆம் திகதி சனிக்கிழமை ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியில் நடைபெற்றது.
கரித்தாஸ் கியூடெக் நிறுவன இயக்குனர் அருட்தந்தை யூஜின் பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் கல்லூரி முதல்வர் அருட்தந்தை அன்ரன் அமலதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி கணித பாட ஆசிரியர்கள் திரு நந்திவர்மன், திரு. கஜீபன் ஆகியோர் வளவார்களாக கலந்து நெறிப்படுத்திய இச்செயலமர்வில் தீவக கல்வி வலயத்திற்குட்பட்ட ஆறு பாடசலைகளைச் சேர்ந்த 90 மாணவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.
இந்நிகழ்வு இலங்கை கரித்தாஸ் செடெக் நிறுவனத்தின் அனுசரணையில் கரித்தாஸ் கொரியா நிறுவனத்தின் நிதிப்பங்களிப்புடன் நடைபெற்றது.