காலி மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மறைமாவட்ட பங்குகளில் பணியாற்றும் மறையாசிரியர்களுக்கான சிறப்பு கருத்தமர்வு கடந்த 01ஆம் திகதி சனிக்கிழமை கரித்தாஸ் SED நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
மறையாசிரியர்களின் கற்பித்தல் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை லியோ மெறில் பீரிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இக்கருத்தமர்வை தேசிய மறைக்கல்வி நடுநிலைய இயக்குநர் அருட்தந்தை பிரதீப் தலைமையிலான குழுவினர் வளவாளர்களாக கலந்து நெறிப்படுத்தியிருந்தனர்.
இந்நிகழ்வில் 150 வரையான மறையாசிரியர்கள் பங்குபற்றி பயனடைந்ததுடன் காலி மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை றேமன்ட் விக்ரமசிங்க அவர்கள் கலந்து இந்நிகழ்வை சிறப்பித்தார்.