யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை யோன் குருஸ் அவர்களின் வழிகாட்டலில் இளையோர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட காட்சி சிலுவைப்பாதை தியானம் புலோப்பளை புனித சிந்தாத்திரை அன்னை ஆலயத்தில் 13ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
புலோப்பளை பங்குத்தந்தை அருட்தந்தை ஜோர்ஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இளையோர்களினால் “சிலுவையோடு பயணம்” எனும் மையக்கருத்தில் சிலுவைப்பாதை நிலைகள் நடிப்பில் காட்சிப்படுத்தப்பட்டு தியானம் நடைபெற்றது.
அத்துடன் அன்றைய தினம் காலை மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களுக்கான தவக்கால தியானமும் திருயாத்திரையும் பங்குத்தந்தை அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்றது.
மறைக்கல்வி மாணவர்களும் மறையாசிரியர்களும் இணைந்து புல்லாவெளி புனித செபஸ்ரியார் யாத்திரைத்தலத்திற்கு திருப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்ற தியான உரை மற்றும் திருப்பலியில் பங்குபற்றினர்.
கட்டைக்காடு பங்குத்தந்தை அருட்தந்தை அமல்றாஜ் அவர்கள் தியான உரையை வழங்கியதுடன் தாளையடி செம்பியன்பற்று பங்குத்தந்தை அருட்தந்தை ஆதர் யஸ்ரின் அவர்கள் திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.