புனித யாகப்பர் ஆலய வருடாந்த திருவிழாவை சிறப்பித்து குருநகர் பங்கில் முன்னெடுக்கப்பட்ட புனித யாகப்பரின் புதுமைகளை உள்ளடக்கிய அவரின் வாழ்கை வரலாற்றை சித்தரிக்கும் ‘களம் தந்த களங்கம்’ தென்மோடிக்கூத்து கடந்த 29ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.
குருநகர் இளைஞர் கலைக்கழகத்தின் தயாரிப்பில் திரு. கிளமென்ட் நெல்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் தலைமையில் குருநகர் கலையரங்கில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வின் ஆரம்பத்தில் குருநகர் பங்கை சேர்ந்த அருட்தந்தையர்களான அருட்தந்தை ஜெயசீலன், அருட்தந்தை அல்பன் இராஜசிங்கம், அருட்தந்தை இருதயதாஸ் ஆகியோருக்கான கௌரவிப்பும் கலைஞர்களான கலையார்வன் குருசுமுத்து இராயப்பு கலைஞானச்செல்வன் அரியநாயகம் அன்று யூலியஸ் ஆகியோருக்கான கௌரவிப்புக்களும் இடம்பெற்றன.
‘களம் தந்த களங்கம்’ தென்மோடிக்கூத்து கலையார்வன் இராயப்பு அவர்களால் எழுதப்பட்டு அன்று யூலியஸ் அவர்களால் நெறியாள்கை செய்யப்பட்டு குருநகர் கலைஞர்களினால் ஆற்றுகைசெய்யப்பட்டு பலரது பாராட்டினையும் பெற்றுக்கொண்டது.