கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான குமித்தே கராத்தே போட்டி 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இப்போட்டியில் 20 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் 67 கிலோகிராம் எடைப்பிரிவில் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி மாணவன் செல்வன் தனுஜன் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டார்.
அத்துடன் இலங்கை கராத்தே சம்மேளனத்தினால் வடமாகாண ரீதியில் முன்னெடுக்கப்பட்ட கராத்தே போட்டி கடந்த மாதம் கிளிநொச்சி உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இப்போட்டிகளில் புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்களான செல்வன் பியன் பெனோ 17வயதுக்குட்பட்ட பிரிவு ஜந்திற்கான குமித்தே மற்றும் குழுக் காட்டா போட்டிகளில் முதலாம் இடத்தையும் தனிக்காட்டா போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டதுடன் செல்வன் பீற்றர் கிறிசான் 17 வயதுக்குட்பட்ட பிரிவு இரண்டிற்கான குமித்தே போட்டியில் முதலாம் இடத்தையும் செல்வன் மெறிஜன் 15 வயதுக்குட்பட்ட பிரிவு ஒன்றிற்கான தனிக்காட்டா போட்டியில் முன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.