கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான காற்பந்தாட்ட போட்டிகள் இம்மாதம் 07ஆம், 08ஆம், 09ஆம் திகதிகளில் வடமராட்சி பிரதேசத்தின் 5 இடங்களில் நடைபெற்றன.
இப்போட்டிகளில் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி 20 வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டியில் முதலாம் இடத்தை பெற்று சம்பியன் பட்டத்தை கைப்பற்றியதுடன் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டியில் மூன்றாம் இடத்தையும் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டியில் நான்காம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.