தர்மபுரம், கல்லாறு புனித குழந்தை இயேசு ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
07ஆம் புதன்கிழமை ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 10ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றதுடன் நற்கருணை விழா திருப்பலியில் மூன்று சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தையும் பெற்றுக்கொண்டார்கள்.
நற்கருணைவிழாத் திருப்பலியை புதுக்குடியிருப்பு றோ.க வித்தியாலய அதிபர் அருட்தந்தை றொபின்சன் ஜோசப் அவர்களும் திருவிழா திருப்பலியை உருத்திரபுரம் ஆரோபணம் சிறுவர் இல்ல காப்பாளர் அருட்தந்தை சசிகரன் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.