மட்டக்களப்பு கல்முனை மரிய தெரேசியா கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப்போட்டி கடந்த 29ஆம் திகதி புதன்கிழமை கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
கல்லூரி அதிபர் அருட்சகோதரி வசந்தமலர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயகாந்தன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் அருட்சகோதரிகள், அயற்பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களெனப் பலரும் கலந்துகொண்டனர்.