காலி மறைமாவட்ட கலேகன புனித பிரான்சிஸ் சவேரியார் சிறிய குருமட மாணவர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட கள அனுபவ சுற்றுலா கடந்த 22, 23ஆம் திகதிகளில் நடைபெற்றது.
குருமட அதிபர் அருட்தந்தை லியோ மெறில் பீரிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் உப அதிபர் அருட்தந்தை செல்வராஜ் அவர்களின் உதவியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தை தரிசித்து யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமடம், புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருமடம், யாழ். புனித மரியன்னை பேராலயம், கொழும்புத்துறை அமலமரித்தியாகிகள் சபை சிறிய குருமடம், பொது நூலகம், கோட்டை, நல்லூர் கந்தசுவாமி ஆலயம், நெடுந்தீவு ஆகிய இடங்களை பார்வையிட்டனர்.
இந்நிகழ்வில் 10 குருமட மாணவர்கள் கலந்து பயனடைந்தனர்.