கற்கடதீவு புனித அந்தோனியார் தவக்கால யாத்திரைத்தல வருடாந்த திருவிழா நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 29ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

27ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை திருச்செபமாலை, திருச்சிலுவைப்பாதை தியானம், நற்கருணைவிழா என்பன இடம்பெற்றன.

திருவிழா திருப்பலியை அமலமரித்தியாகிகள் சபை மலரும் முல்லை அமைய இயக்குனர் அருட்தந்தை ஜீவரட்ணம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை கிளறேசியன் சபை அருட்தந்தை அபிலஸ் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

By admin