கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தில் கடந்த காலங்களில் பணியாற்றி இறைபதமடைந்தவர்களை நினைவுகூர்ந்து முன்னெடுக்கப்பட்ட அஞ்சலி நிகழ்வு 29ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை கிளிநொச்சி கரித்தாஸ் நிறுவனத்தில் நடைபெற்றது.

நிறுவன இயக்குநர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட முந்நாள் ஆயரும் மறைமாவட்ட கியூடெக் நிறுவன ஸ்தாகபருமான பேரருட்தந்தை தியோகுப்பிள்ளை மற்றும் நிறுவன முந்நாள் இயக்குனர்கள் அருட்தந்தை தேவராஜா, அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதன், அருட்தந்தை பயஸ், அருட்தந்தை ஜெபநேசன், அருட்தந்தை பீற்றர் மற்றும் நிறுவன பணியாளர்கள் ஆகியோரின் உருவப்படங்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை பெனற் அவர்களின் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பணியாளர்கள் மற்றும் இறந்த பணியாளர்களுடைய உறவினர்கள் கலந்து செபித்ததோடு திருவுருவப்படங்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

By admin