கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தின் ‘இலங்கையின் இயற்கை சூழலை பாதுகாப்பதற்கான அடிக்கல்’ என்னும் செயற்றிட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான களஅனுபவ சுற்றுலா நிகழ்வு கடந்தவாரம் நடைபெற்றது.
நிறுவன இயக்குநர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்கள் இலங்கையில் இயற்கை வளங்கள் நிறைந்த திருகோணமலையில் உள்ள புறா மலை, நிலாவெளி கடற்கரை, திருக்கோணேஸ்வரம், ராவணன் வெட்டு மற்றும் கிண்ணியா சுடுநீர் ஊற்று போன்ற இடங்களை தரிசித்தனர்.
இயற்கையின் முக்கியத்துவத்தையும், அதனை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்து கொள்வதை நோக்காக கொண்டு கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மூன்று பாடசாலைகளை இணைத்து முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் 50 வரையான மாணவர்களும், 07 வரையான ஆசிரியர்களும் கரித்தாஸ் வன்னி கியூடெக் திட்ட இணைப்பாளரும், பணியாளர்களும் பங்குபற்றி பயனடைந்தனர்.