கிளிநொச்சி கரடிப்போக்கு டொன் பொஸ்கோ பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்டு வந்த கட்டடத்தொகுதி கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்புவிழா 30ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
பாடசாலை அதிபர் அருட்தந்தை றொஜுசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கட்டடத்தை ஆசீர்வதித்து திறந்துவைத்தார்.
இந்நிகழ்வில் புனித டொன் பொஸ்கோ சபை மாகாண முதல்வர் அருட்தந்தை றொசான் மிராண்டா அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கிளிநொச்சி பிரதேச செயலர் திரு. முரளிதரன், கிளிநொச்சி பிரதேச வைத்தியசாலை இயக்குநர் வைத்தியர் பிரபாத் வீரவத்த, நீர்கொழும்பு டொன் பொஸ்கோ இல்ல இயக்குநர் அருட்தந்தை விராஜ் சமார, தென்மராட்சி வலய கல்வி பணிப்பாளர் திரு. கமலராஐன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர்.