கனடா திருமறைக்கலாமன்றத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கலைப்பாலம் 2023 நிகழ்வு 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கனடா ஸ்காப்றோ பேர்ச்மவுன்ட் பிரதேசத்திலுள்ள கந்தசாமி கோவில் மண்டபத்தில் நடைபெற்றது.
கனடா மன்ற தலைவர் எலியாஸ் அருளானந்தம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கனடா திருமறைக்கலாமன்ற கலைஞர்களுடன் யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் திரு. யஸ்ரின் தைரியநாதன் அவர்கள் இணைந்து வழங்கிய இயல், இசை, நாடகம், நாட்டுக்கூத்து போன்ற கலைநிகழ்வுகள் மேடையேற்றப்பட்டன.
இந்நிகழ்வில் திருமறைக்கலாமன்ற உதவி நிர்வாக இயக்குநரும் யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மைய இயக்குநருமான அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.