கனடா நாட்டின் கோர்ண்வோல் பிரதேச தமிழ் கத்தோலிக்க மக்கள் இணைந்து முன்னெடுத்த ஒளிவிழா கடந்த மாதம் 28ஆம் திகதி சனிக்கிழமை Blessed Nativity மண்டபத்தில் நடைபெற்றது.

பங்குச்சபை தலைவர் திரு. ஜெயசீலன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிள்ளைகள் மற்றும் பெற்றோர்களின் அபிநய நடனங்கள், வில்லுப்பாட்டு, நத்தார் கரோல் பாடல்கள் போன்ற கலைநிகழ்வுகள் இடம்பெற்றன.

கோர்ண்வோல் மேயர் திரு. யஸ்ரின் ரவுன்டேல் அவர்கள் பிரதம விருந்தினராகவும், மொன்றியல் மீட்பின் அன்னை மறைத்தள பங்குத்தந்தை அருட்தந்தை ஜேம்ஸ் சிங்கராயர் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்குமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin