யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் பாடசாலைரீதியாக முன்னெடுக்கப்படும் கத்தோலிக்க திருமறைத்தேர்வு 25ஆம் திகதி வருகின்ற சனிக்கிழமை நடைபெற ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
யாழ். மறைமாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் கத்தோலிக்க மாணவர்களுக்காக முன்னெடுக்கப்படும் இத்தேர்வு காலை 9மணி தெடக்கம் 12மணிவரை நடைபெறுவுள்ளதெனவும் அனைத்து கத்தோலிக்க மாணவர்களையும் இதில் கலந்துகொள்ளும்படியும் மறைக்கல்வி நிலைய இயக்குனர் அருட்தந்தை ஜேம்ஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.