ஊர்காவற்துறை பிரதேச செயலக பிரிவில் கரம்பொன் புனித செபஸ்தியார் ஆலயத்திற்கு அருகாமையில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட மதுபானசாலையை அகற்றக்கோரி அப்பிரதேச மக்களால் முன்னெடுக்கப்பட்ட கண்டன எதிர்ப்பு போராட்டம் கடந்த 28ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஊர்காவற்துறை பிரதேச செயலகத்திற்கு முன்பாக நடைபெற்றது.
இப்போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பதாகைகளை ஏந்தியும் கோசங்களை எழுப்பியும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியதுடன் இது தொடர்பான மகஜர் ஒன்றினை ஊர்காவத்துறை பிரதேச செயலகத்திடம் கையளித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இப்போராட்டத்தில் அருட்தந்தையர்கள், கிராம மக்களென பலரும் கலந்துகொண்டனர்.