இவ்வருடம் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள புங்குடுதீவு பிரதேசத்தை சேர்ந்த மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட கணித பாட செயலமர்வு கடந்த 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தரிசனம் கல்வி நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் வழிகாட்டலில் புங்குடுதீவு புனித சவேரியார் ஆலய மறையாசிரியர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இக்கருத்தமர்வில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி ஆசிரியர் திரு. கிறிஸ்ரியன் அவர்கள் வளவாளராக கலந்து மாணவர்களை வழிப்படுத்தினார்.
இச்செயலமர்வில் 30க்கு அதிகமான மாணவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.