கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட 2025ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி 06ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் திரு. தவகோபால் யோகலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமலமரித்தியாகிகள் சபை செயற்திட்ட இணைப்பாளரும் பாடசாலையில் பழைய மாணவருமான அருட்தந்தை ரமேஸ் அவர்கள் பிரதம விருந்தினராகவும் மருதங்கேணி கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு. செல்லத்துரை ஸ்ரீராமச்சந்திரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் முள்ளியான் கிராம சேவையாளர் திரு. கிட்டிணப்பிள்ளை சுபகுமார் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.