கட்டைக்காடு பங்கில் முன்னெடுக்கப்பட்ட மறைகல்வி வார சிறப்பு நிகழ்வுகள் பங்குத்தந்தை அருட்தந்தை அமல்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அருட்சகோதரன் யோன் கில்ரன் அவர்களின் உதவியுடன் கடந்த வாரம் நடைபெற்றன.
18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மறைக்கல்வி கொடியேற்றப்பட்டு திருப்பலியுடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வில் விளையாட்டுக்கள், மறைக்கல்வி மாணவர்கள் மறையாசிரியர்களுக்கான கருத்தமர்வுகள், வினாவிடை போட்டி தீப்பாசறை, என்பன இடம்பெற்றன.
கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலயம், வெற்றிலைக்கேணி புனித அந்தோனியார் ஆலயம் மற்றும் இயக்கச்சி புனித செபஸ்தியார் ஆலய மறைக்கல்வி மாணவர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வுகளின் இறுதிநாள் நிகழ்வுகள் கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலயத்தில் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
அன்றைய தினம் காலை யாழ். மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்கள் தலைமையில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து மறைக்கல்வி வாரத்தில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வுகளில் 180 வரையான மறைக்கல்வி மாணவர்களும் 16 மறையாசிரியர்களும் பங்குபற்றி பயனடைந்தனர்.