கச்சைதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த தவக்கால திருயாத்திரை திருவிழா எதிர்வரும் பங்குனி மாதம் 14ம் 15ம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன் ஒரு கட்டமாக திருவிழாவிற்கான முன்னாயத்த கூட்டம் கடந்த 07ஆம் திகதி, வெள்ளிக்கிழமை நேற்றைய தினம் யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இவ்வருடம் இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து ஒன்பதாயிரம் பக்தர்கள் எதிர்பார்க்கப்படுகிறார்களென தெரிவிக்கப்பட்டதுடன் இவர்களுக்கான பாதுகாப்பு, சுகாதாரம், போக்குவரத்து மற்றும் உணவு போன்ற விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

இக்கூட்டத்தில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம், இந்திய துணைத்தூதுவர் திரு. நாகராஜன், நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதர், பிரதி கடற்படைத் தளபதி, பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர்கள், சுங்கத் திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

By admin