மிருசுவில் பங்கிலுள்ள கச்சாய் புனித செபமாலை அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை லோறன்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 07ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
30ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 06ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை செம்பியன்பற்று பங்குத்தந்தை அருட்தந்தை டியூக் வின்சன் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை சாவகச்சேரி பங்குத்தந்தை அருட்தந்தை ஞானறூபன் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.