இலங்கை இந்திய அரசுகளுடன் இணைந்து இலங்கை இந்திய திருஅவைகள் மீனவர் பிரச்சனைகளை தீர்க்க முன்வர வேண்டுமென சிவகங்கை மறைமாவட்ட ஆயர் அவர்கள் அழைப்புவிடுத்துளார்.
கச்சதீவு யாத்திரைத்தல திருவிழாவிற்கு வரலாற்றில் முதல் தடவையாக இந்திய நாட்டிலிருந்து வருகைதந்திருந்த சிவகங்கை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை லூர்து ஆனந்த் அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை கச்சதீவு பனித அந்தோனியார் திருத்தலத்தில் வைத்து மறை அலைத் தொலைக்காட்சிக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியொன்றில் மேற்கண்டவாறு அழைப்புவிடுத்துள்ளார்.
இப்பேட்டியில் மேலும் அவர் தெரிவிக்கையில் இத்திருவிழாவில் தான் கலந்து கொள்வதையிட்டு பெரும் மகிழ்வடைவதாகவும் தனது இப்பயணம் இலங்கையிலுள்ள தமிழ் மறைமாவட்டங்களுடன் நல்லுறவை மேம்படுத்தவதை நோக்கமாக கொண்டுள்ளதெனவும் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் தான் நான்கு தமிழ் மறைமாவட்டங்களையும் தரிசித்து ஆயர்கள் குருக்களுடன் உரையாடியதாகவும குறிப்பாக யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களுடன் இலங்கை இந்திய மீனவர்கள் தொடர்பாக விரிவாக ஆராய்ந்தாகவும் தெரிவித்தார்.