கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா வருகின்ற மாதம் 14,15 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் அங்கு நடைபெறும் வேலைகளை மேற்பார்வை செய்யும் நோக்கோடு முன்னெடுக்கப்ட்ட முன்னாயத்த விஜயம் 14ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கச்சதீவிற்கான இவ்விஜயத்தில் நெடுந்தீவு பங்குத்தந்தையும் கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தல பரிபாலகருமான அருட்தந்தை பத்திநாதன் மற்றும் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், நெடுந்தீவு பிரதேச செயலர், கடற்படை வடபிராந்திய உயரதிகாரிகள், நெடுந்தீவு கடற்படை தளபதி ஆகியோர் கலந்துகொண்டனர். இவ்விஜயத்தின்போது கச்சதீவை தரிசித்த இக்குழுவினர் அங்கு நடைபெறும் வேலைகளை மேற்பார்வை செய்ததுடன் அங்கு முன்னெடுக்கப்பட வேண்டிய ஏனைய விடயங்களையும் கண்டறிந்தனர்.

By admin