நாவாந்துறை பங்கிற்குட்பட்ட ஓட்டுமடம் புனித செபஸ்தியார் ஆலய கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்பு விழா 22ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து புதிய ஆலயத்தை ஆசீர்வதித்து திறந்துவைத்து திருப்பலி ஒப்புக்கொடுத்தார்.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் கலந்து செபித்தனர்.
இவ்வாலயத்தின் கட்டுமானப்பணிகள் பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரட்ணம் அவர்களால் கடந்த வருடம் ஆவணி மாதம் ஆரம்பிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.