இளவாலை போயிட்டி லூர்து அன்னை, சகாயபுரம் புனித சதாசகாய அன்னை, மற்றும் சேந்தாங்குளம் ஆரோக்கியநாதர் ஆலயங்களில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா முறையே கடந்த 26, 28, 29ஆம் திகதிகளில் நடைபெற்றன.

பங்குத்தந்தை அருட்தந்தை ஞானரூபன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் கலைநிகழ்வுகளும் ஒளிவிழா போட்டிகளில் வெற்றிபெற்ற மற்றும் கா.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்த அத்துடன் பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்களுக்கான பரிசளிப்பும் கௌரவிப்புக்களும் இடம்பெற்றன.

By admin