திருகோணமலை மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஒன்றியமும் சமூக தொடர்பு நிலையமும் இணைந்து முன்னெடுத்த ஒளிவிழா கடந்த 28ஆம் திகதி சனிக்கிழமை திருகோணமலை யூபிலி மண்டபத்தில் நடைபெற்றது.
மறைமாவட்ட இளையோர் மற்றும் சமூகத்தொடர்பு நிலைய இயக்குனர் அருட்தந்தை றஜீவா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை கிறிஸ்ரி நோயல் இம்மானுவேல் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் கலைநிகழ்வுகள், விளையாட்டுக்கள், புதிய நிர்வாகத்தெரிவு என்பன இடம்பெற்றதுடன் 230 வரையான இளையோர் பங்குபற்றியிருந்தனர்.