தமிழ் சிங்கள சிறார்களிடையே ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் உருவாக்கும் நோக்கில் லதனி சிறுவர் இல்ல சிறார்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட ஒற்றுமை வார சிறப்பு நிகழ்வு கடந்த 17ஆம் திகதி ஆரம்பமாகி 21ஆம் திகதி வரை முல்லைத்தீவில் நடைபெற்றது.
லதனி நிலைய நிறுவுனரும் தலைவருமான அருட்தந்தை நெவில் கூஞ்ஞே அவர்களின் ஒழுங்குபடுத்தலில் முல்லைத்தீவிலுள்ள லதனி சிறுவர் இல்லத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் முல்லைத்தீவு நகர் சுத்தப்படுத்தல் மற்றும் சிறார்களுக்கான ஒன்றுகூடல்கள் என்பன இடம்பெற்றன.
இறுதிநாள் சிறப்பு நிகழ்வாக கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் முல்லைத்தீவு, சிலாவத்தை, உடுப்புக்குளம், அளம்பில் பங்குகளை சேர்ந்த 200க்கும் அதிகமான மறைக்கல்வி மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.