யாழ். கிறிஸ்தவ ஒன்றியமும், கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான யாழ். மறைமாவட்ட ஆணைக்குழுவும் இணைந்து முன்னெடுத்த ஒன்றிப்பு வார நிகழ்வுகள் 18ஆம் திகதி தொடக்கம் 25ஆம் திகதி வரை மறைமாவட்டத்தின் பல இடங்களிலும் நடைபெற்றன.
முதல்நாள் நிகழ்வுகள் கடந்த 18 ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணம் பரிசுத்த பேதுரு மெதடிஸ்த ஆலயத்தில் நடைபெற்றன. இந்நிகழ்வில் கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான சிறப்புக் கருத்தரங்கும், தொடர்ந்து வழிபாடும் இடம்பெற்றன.
நிசேயா பொதுச்சங்கம் நடைபெற்றதன் 1,700 ஆண்டுகள் நிறைவாக இவ்வருடம் அமைந்துள்ளமையால் அதனை மையப்படுத்தி உரைகள் இங்கு இடம்பெற்றன. நிசேயா பொதுச் சங்கத்தின் வரலாறு பற்றி அருட்;தந்தை ஜெராட் சவரிமுத்து அவர்களும் “நிசேயா பொதுச் சங்கத்திலே தீர்மானிக்கப்பட்ட இறையியலானது, இன்றைய நம் வாழ்வுக்குச் சொல்லும் செய்தி என்ன?” என்ற தலைப்பிலே அருட்தந்தை டேவிட் நிருக்சிகன் அவர்களும்; உரையாற்றினார்கள்;.
தொடர்ந்து 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் ஒன்றிப்பு வார நிகழ்வுகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் தென்னிந்திய திருஅவை ஆயர் பேரருட்தந்தை வேலுப்பிள்ளை பத்மதயாளன் அவர்கள் கலந்து அருளுரை வழங்க யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் இறுதி ஆசீரை வழங்கினார்.
தொடர்ந்து இறுதிநாள் நிகழ்வுகள் 25ஆம் திகதி சனிக்கிழமை பரியோவான் ஆலயத்தில் நடைபெற்றதுடன் இந்நிகழ்வுகளில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், குருமட மாணவர்கள், கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்த இறைமக்களென பலரும் கலந்து கொண்டனர்.