யாழ். கிறிஸ்தவ ஒன்றியமும், கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான யாழ். மறைமாவட்ட ஆணைக்குழுவும் இணைந்து முன்னெடுத்த ஒன்றிப்புவார இறுதிநாள் நிகழ்வு கடந்த 25ஆம் திகதி வியாழக்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது.
ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை செல்வரட்ணம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அங்கிலிக்கன் திரு அவையின் யாழ். குருமுதல்வர் திருவருட்பணியாளர் செல்வன் அவர்கள் கலந்து அருளுரை வழங்க, யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் இறுதி ஆசீரை வழங்கினார்.
இந்நிகழ்வில் தென்னிந்திய திரு அவை ஆயர் பேரருட்தந்தை வேலுப்பிள்ளை பத்ம தயாளன் அவர்களும் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், குருமட மாணவர்கள், கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்த இறைமக்களென 170ற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர்.