யூபிலி ஆண்டு சிறப்பு நிகழ்வாக யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்ப நல நிலையத்தால் முன்னெடுக்கப்பட்ட ஒட்டகப்புலம் பங்குமக்களுக்கான கருத்தமர்வு கடந்த 07ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஒட்டகப்புலம் புனித அமல உற்பவ அன்னை ஆலயத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை அருள்தாசன் அவர்களின் ஏற்பாட்டில் அகவொளி குடும்ப நல நிலைய இயக்குநர் அருட்தந்தை டேவிட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ‘நம்பிக்கையின் திருப்பயணிகள்’ என்னும் கருப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில் கருத்துரைகள், நற்கருணை ஆராதனை என்பன இடம்பெற்றன.

அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை ஜெராட் அவர்கள் கலந்து நெறிப்படுத்திய இக்கருத்தமர்வில் 50ற்கும் அதிகமானவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

 

By admin