தவக்கால சிறப்பு நிகழ்வாக எழுவைதீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட ‘கடலில் கரையும் குருதி’ கடல் சிலுவைப்பாதை தியான ஆற்றுகை கடந்த 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அங்கு நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை யூட் கெமில்டன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் எழுவைதீவு கடல் பிரதேசத்தில் நடைபெற்ற இச்சிலுவைப்பாதை தியானத்தில் பங்குமக்கள் ஏராளமானவர் கலந்து செபித்தனர்.