மன்னார் மறைமாவட்டத்தின் எழுத்தூர் பங்கில் அமைக்கப்ட்டுவந்த புனித அடைக்கல அன்னை ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அவ்வாலய திறப்புவிழா 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பங்குத்தந்தை அருட்தந்தை நவரட்ணம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
அழகிய தோற்றத்துடன் அமையப்பெற்ற புதிய ஆலயத்தை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெனான்டோ அவர்கள் ஆசீர்வதித்து திறந்துவைத்து திருப்பலி ஒப்புக்கொடுத்தார்.
இந்நிகழ்வில் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை கிறிஸ்துநாயகம் மற்றும் குருக்கள் இறைமக்களென பலரும் கலந்துகொண்டனர்.
இவ்வாலயத்தின் கட்டுமானப்பணிகள் ஆரம்பமாகி 13வருடங்களின் பின் இவ்வாலயம் கட்டிமுடிக்கப்பட்டுள்ளதுடன் மன்னார் மறைமாவட்ட ஆயர் மற்றும் உள்ளநாட்டு வெளிநாட்டு பங்குமக்கள் ஆலயக்கட்டுமானப்பணிக்கு நிதிஉதவி வழங்கியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
 

By admin