ஊர்காவற்றுறை புனித யாகப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சாள்ஸ் ஜஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 25ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.
16ம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 24ம் திகதி புதன்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி விரிவுரையாளர் அருட்தந்தை ரவிராஜ் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை புங்குடுதீவு பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.